வீர வணக்கம்
அம்மா பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் மறைவு: ஒரு புனிதத்தாயின் அஞ்சலி
தமிழீழ விடுதலைக்காய் தன் பெருவயிறு சுமந்த மகனை (பண்ணன்) தமிழீழ மண்னுக்காய் ஈகம் செய்த புனிதத்தாயின் திருவடிக்கு புகழாஞ்சலி செலுத்துகிறோம். அவரது மறைவு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாகும்.
மகன் வீரச்சாவடைந்த நேரத்தில், அய்யா பேராசிரியர் நெடுஞ்செழியன் எங்களிடம் இவ்வாறு கூறினார்: "நாட்டில் விதைத்தேன்: வீட்டில் முளைத்து விட்டது". இந்த வரிகள் இப்போதும் எங்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து நிற்கிறது. இது அத்தாயின் தியாகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வரிகளாகும்.
அய்யா மற்றும் அம்மா தம்பதியினரின் மகன் பண்ணன், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு எமது இயக்க உறுப்பினர்களோடு (விடுதலைப் புலிகள்) கடல் வழியாக ஈழம் சென்று போராட்டக் களத்தில் பங்கேற்று உயிர்த் தியாகம் செய்தார். அவரது தியாகம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது.
எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டம் தமிழ்நாட்டில் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே மறைந்த பேராசிரியர் அய்யா க. நெடுஞ்செழியன், அவரது வாழ்விணையர் அம்மா பேராசிரியர் சக்குபாய் ஆகியோருக்கும் எங்களுக்கும் இடையிலான உறவும் அன்றிலிருந்தே தொடங்கி தொடர்ந்தது. பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களும் அம்மா சக்குபாய் அவர்களும் எங்கள் மீதும் எமது தலைவரின் மீதும் ஆழமான அன்பு செலுத்தியவர்கள்.
ஈழப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்ட பேபி சுப்பிரமணியம், நான் (கிஅ) திலகர், சந்தோஸ், மூர்த்தி, சிறீ ஆகியோர் இவர்களின் வீட்டில் சிலகாலம் தங்கி எமது பணியை முன்னெடுத்தபோது, எமக்கு அன்புகாட்டி அரவணைத்த தாயின் மறைவுச் செய்தி எனக்கு ஆழமான வலிகளைக் கொடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது பற்றுக்கொண்டு, எமது விடுதலைக்காய் பேசியும் எழுதியும் வந்த பெருமாட்டி அம்மா சக்குபாய் என்றும் ஈழத்தமிழர் வரலாற்றில் நிலைத்தே நிற்பார். அவரது பங்களிப்பு விடுதலைப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தது.
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்....

0 Comments