பெரியார் ஒருவர்தான் பெரியார்!
சீமானின் முரண்பாடுகளும் திராவிட இயக்கத்தின் பதிலடியும்
ஜனவரி 3-ஆம் தேதி மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் தம்பியான சீமான் பெரியாரைத் தரக்குறைவாக விமர்சித்தும், தமிழ்நாட்டுக்குப் புதிதாக பல பெரியார்களை அறிமுகம் செய்தும் வைத்திருக்கின்றார். ஜாதி ஒழிப்புக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெரியாரை ‘பெரியார்’ என ஏற்க முடியாது எனக்கூறும் இவர், புதிதாகப் பட்டியலிட்டிருக்கும் பலர் எத்தனை முரண்பாடுகளாக இருக்கின்றனர் என்பதை தென்பொன்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
எட்வின் பிரபாகரன் சுட்டிக்காட்டிய முரண்பாடுகளின் தொகுப்பு:
- ஜதிய பாகுபாடுகளை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட இம்மானுவல் சேகரனாரும் பெரியார்! அவர் கொலைக்கு காரணமான பசும்பொன்னும் பெரியார்!
- "தமிழ்நாடு" என்று பெயர் வைக்கச் சொல்லி 76 நாட்கள் உண்ணாவிைதம் இருந்து செத்த தியாகி சங்கரலிங்கனாரும் பெரியார்! பெயர் வைக்க மறுத்த காமராஜரும் பெரியார்!!
- தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற பெருஞ்சித்திரனாரும் பெரியார்! சமஸ்கிருத மந்திரங்கள் தேவை என்ற மபொசியும் பெரியார்!!
- இது ஆரிய நாடு என்ற பாரதியாரும் பெரியார்! ஆரியக் கவிபாடி உடைத்த திராவிடப் பாவேந்தர் பாரதிதாசனும் பெரியார்!!
- "நாடகக் காதல்" ராமதாசும் பெரியார்! "ஆணவக்கொலை எதிர்ப்பு" திருமாவளவனாரும் பெரியார்!!
- "இந்துவாகச் சாக மாட்டேன்" என்று சொன்ன அம்பேத்கரும் பெரியார்! அம்பேத்கர் கருத்தை எதிர்த்த எம்.சி. ராஜாவும் பெரியார்!!
1885-இல் திராவிட பாண்டியன் என்று ஒரு இதழ் இந்த மண்ணிலே வந்தது. ஜான் ரத்தினம் என்பவர் தொடங்கினார். அதில் ஆசிரியராக இருந்தவர் அயோத்திதாச பண்டிதர். 1892-இல் திராவிடத்தைத் பெயராக வைத்து தன் அமைப்பைத் தொடங்கியவர் அயோத்திதாச பண்டிதர். 1894-இல் திராவிடம் என்கிற சொல்லை வைத்து ஒரு கட்சியைத் தொடங்கியவர் நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.
திராவிட இயக்கத்தினரைச் சொல்வதைப் போல அயோத்திதாசரையும் இரட்டைமலையாரையும் திராவிடப் பன்னிகள் என்று சொல்லுவதற்கு தைரியம் உள்ளதா? இனி எந்த ஊரில் நீங்கள் பெரியாரைப் பற்றி இழிவு செய்து பேசினாலும் அதே ஊரில் அதே இடத்தில் அடுத்த நாள் இப்படி ஒரு பெரும் கூட்டத்தை நாங்கள் நடத்தியே தீருவோம். முதலமைச்சர் பதவி தேடி வந்தபோது வேண்டாம் என்று சொன்னவரடா எங்கள் கிழவன்.
தன் வீட்டு கார் ஓட்டுநரை மட்டும்தான் இன்னும் சீமான் பெரியார் என்று கூறவில்லை. சீமான் யாரையெல்லாம் பெரியார் என்று சொன்னாரோ அவர்களெல்லாம் பெரியார் என்று கூறியதே பெரியாரைத்தான். 1920 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை விதவைகள் 497 பேர் இருந்தனர். 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட விதவைகள் ஒன்றே கால் கோடி பேர்.
பெரியாரின் தங்கை மகளும் இப்படி 10 வயதில் விதவையானார். அந்த பெண் குழந்தை பருவமடைந்த பின்னர் மறுமணம் செய்துவைக்கிறார் பெரியார். விதவை மறுமணம் அங்கு ஆரம்பித்தது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு தர வேண்டுமென்று சொன்னவர் பெரியார்; சட்டம் போட்டவர் கலைஞர். இந்தத் தேர்தலில் சீமான் தான் தமிழ்நாட்டுக்கு பொழுதுபோக்கு, அவர் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.
கடந்த ஒரு நூற்றாண்டாக பெரியார் தான் இந்த நாட்டை ஆண்டிருக்கின்றார். "ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்றான்"னு சொன்ன மாதிரி, பெரியார் சொன்னார் நீதிக்கட்சி செய்தது. பெரியார் சொன்னார் காமராஜர் செய்தார். பெரியார் சொன்னார் அண்ணா செய்தார், கலைஞர் செய்தார்.
நாக்பூரில் இருக்கக்கூடிய RSS-ன் தலைவர் மோகன் பகவத்தின் கட்டளைப்படி, ஆடிட்டர் குருமூர்த்தியால் தயாரிக்கப்பட்ட "பிராமணக் கடப்பாரை" மயிலாடுதுறைக்கு வந்திருக்கின்றது. இவர்தான் கடப்பாரை. எவ்வளவோ முயன்ற அந்த கடப்பாரையை தனது இடது கையால் தூக்கி எறிந்தவர் பெரியார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பெரியாரின் கனவை இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண் துணை அர்ச்சகர்களை நியமித்து நிறைவேற்றியுள்ளார். திராவிட இயக்கம் 2000 ஆண்டு மேலாதிக்கத்தைத் தகர்த்தது.
பெரியார்கள் எல்லாம் ஏற்றுக்கொண்ட பெரியார் எங்கள் பெரியார் என்பதுதான் இங்கே வரலாறு. தேவநேயப் பாவாணருக்கு திராவிட மொழிநூல் ஞாயிறு என்கிற பட்டத்தை வழங்கிய மாமனிதர் பெரியார். பாவேந்தர் பாரதிதாசனை உலகிற்கு அடையாளம் காட்டியவர் பெரியார்.
1939-இல் அண்ணா சொன்னார்: ‘ஈவெராவின் அந்தத் தாடியைப் பிடித்து ஆட்ட நினைக்கிறார்கள். அந்தத் தாடியில் ஒட்டுமொத்த தமிழ்நாடே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியுமா? இன்றைக்கு அவர்கள் ஒரு மயிரை அசைக்க நினைத்தாலே ஒட்டுமொத்த தமிழ்நாடும் பொங்கிவிடும்’. பெரியார்தான் தமிழ்நாடு என்பதை இந்த முட்டாள் சீமானுக்கு யாராவது சொல்லிப்புரிய வைக்க வேண்டும். பெரியார் ஒருவர்தான் பெரியார்.





0 Comments