elugai

ஈழத்தமிழ் இலக்கியத்தின் பிதாமகன் டொமினிக் ஜீவா: மானுடக் கொடுமைகளுக்கு எதிரான போர்வாளின் நினைவு நாள்- பகுதி 1

ஈழத்தமிழுலகின் இறுமாப்பு! மானுடக் கொடுமைகளுக்கு எதிரான போர்வாள் எங்கள் தாயகத்தின் இலக்கியப் பிதாமகன் டொமினிக் ஜீவா, இன்று அவரின் நினைவு நாள்

டொமினிக் ஜீவா (Dominic Jeeva, 27 ஜூன் 1927 – 28 ஜனவரி 2021)

“கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிடையொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வு உடையவர்களாகவே திகழ்வர் எனச் சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வு போதவாக போம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிற்றிடம் அதனை போம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிற்றுள் ஒருவர் போம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார்.

டொமினிக் ஜீவா, ஒரு படிக்காத மேதை, உன்னத மனிதாபிமானி முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த பத்திரிகையாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, கலை கக்கும் பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் - எனப் பன்முக ஆளுமை படைத்தவர்.

பிறப்பு மற்றும் இளமை

டொமினிக் ஜீவா 27.06.1927 அன்று யாழ்ப்பாணத்தில் அவிராம்பிள்ளை ஜோசப் மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் யாழ்ப்பாணத்தில் முடிதிருத்தகம் போடத்தி வந்தார்.

“பிறப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சவரத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன். ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அந்தக் காலத்தில் தான் என்னை வெகுவாகப் பாதித்த அந்த நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இலக்கியத்துறை பிரவேசத்திற்கு இந்த நிகழ்ச்சிதான் காரணம். போன் அப்போது தொடக்கப்பள்ளி மாணவன். அந்த பிஞ்சுப் பருவத்திலையே என் இதயத்தில் விழுந்த அடி, அதன் வடு, என் படிப்பை, என்னை வளர்த்த என் தந்தை செய்த தொழிலைச் சுட்டிக் காட்டிய போழுது, என் இதயத்தில் விழுந்த காயந்தான் என் எழுத்தில் எரிகிறது” எனத் தமது இளமைக்கால கொடுமையான நிகழ்வு குறித்தும், இலக்கிய உலகில் பிரவேசிப்பதற்கான சமூகச் சூழல் பற்றியும், ‘ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல்’ என்னும் தமது நூலில் டொமினிக் ஜீவா பதிவு செய்துள்ளார்.

ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தார். தமிழகத்து கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவரான ப. ஜீவானந்தம் தலைமைறை வாழ்வின் போருட்டு 1948 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்தார். அப்போது டொமினிக் ஜீவா ப.ஜீவானந்தத்தை சந்தித்து, அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் தமது அரசியல், சமூக இலக்கிய நோக்கினை சரியான திசைவழியில் அமைத்துக் கொண்டார். அது முதல் டொமினிக் என்ற தமது பெயருடன் ‘ஜீவா’ என்று இணைத்துக் கொண்டு ‘டொமினிக் ஜீவா’ என்று அழைக்கப்பட்டார்.

டொமினிக் ஜீவாவின் உருவப்படம்

இலக்கியப் பயணம்

‘சுதந்திரன்’ இதழ் 1956 ஆம் ஆண்டு போடத்திய சிறுகதப் போட்டியில் டொமினிக் ஜீவாவின் ‘எழுத்தாளன்’ என்னும் சிறுகதை முதற் பரிசைப் பெற்றது. தினகரன், ஈழநாடு முதலிய ஈழத்து இதழ்களில் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டது. மேலும், தமிழகத்து இலக்கிய இதழ்களான சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகளும், படைப்புகளும் வெளியானது.

‘மல்லிகை’ இதழை 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியிட்டார். ‘மல்லிகை’ இதழின் ஆசிரியராக, பதிப்பாசிரியராக, வெளியீட்டாளராக, வினியோகிப்பாளராக விளங்கினார் டொமினிக் ஜீவா. ‘மல்லிகை’ இதழின் மகுட வாக்கியம், “ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியிலையே கலைகளில் உள்ளம் ஈடுபட்டடன்றும் போப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்” என்ற பாரதியின் வாக்காகும்.

“சிலக அங்கீகரிக்கும் போலையம் ஒன்றினுள் இருந்து வெளிவந்த ஒரே சஞ்சிகை மல்லிகை தான். சலூனில் தொழில் செய்பவரைக் கொண்டு வெளிவந்த சர்வதேசச் சஞ்சிகையும் மல்லிகைதான், இது சவரக்கடையல்ல-எனது சர்வகலாசாலை. எழுத்து எனக்குத் தொழில். பெனா சமூக மாற்றத்திற்கான வலிமைமிக்க ஆயுதம்” என பெருமிதத்துடன் டொமினிக் ஜீவா பதிவு செய்து உள்ளார்.

“எமது மண் வாசனையுடன் யதார்த்த இலக்கியம் தோன்றிய போது அதற்குத் தளம் கொடுக்கச் சஞ்சிகைகள் இருக்கவில்லை. இந்தியச் சஞ்சிகைகளும் எமது இலக்கியத்தை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாது புறக்கணித்தன. இந்நிலையில் எமக்கென்று ஒரு சஞ்சிகையின் அவசியத்தை உணர்ந்து அதன் வழி மல்லிகையைத் தொற்றுவித்தேன்”. என மல்லிகை இதழின் வரலாற்றுத் தொலவையை டொமினிக் ஜீவா தமது நேர்காணலில் கூறியுள்ளார்.

ஈழத்து இலக்கியத்தை இனங்கண்டு வெளியிட்டு தமிழிலக்கியத்திற்கு அளித்தல் வேண்டும். அடக்கியடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்கான படைப்புகளை முன்னுரிமையுடன் வெளியிடல் வேண்டும். கொள்கை கருத்துக்கள் வேறுபட்ட தரமான படைப்புகளையும், படைப்பாளிகளையும் தமிழுலகு அறிய வைத்தல் வேண்டும். புதியதொரு எழுத்துப் பரம்பரையை தொற்றுவித்தல் வேண்டும் என்பனவற்றை ‘மல்லிகை’ இதழ் நோக்கமாகக் கொண்டு வெளிவந்தது.

Malligai Magazine

மல்லிகை இதழின் சிறப்பு பதிப்பு

மல்லிகை இதழின் பங்களிப்பு

‘மல்லிகை’, இதழ் ஈழத்து எழுத்தாளர்கள் உருவாகி வளர்வதற்கற்ற தளத்தை உருவாக்கியது. டொமினிக் ஜீவா தமது சுய வளர்ச்சியை தியாகம் செய்து ஏனைய இலக்கியவாதிகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்தார்.

‘மல்லிகை’ இதழில் சிறுகதைகள், புதுக்கவிதைகள், பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகள், திறனாய்வுகள், உலகச் செய்திகள், துணுக்குகள், வாதப்பிரதிவாதங்கள், நூல் மதிப்புரைகள் என ஏராளமானச் செய்திகள் இடம் பெற்றன. மேலும், ஆசிரியர் தலையங்கம், தூண்டில் பகுதியும் சிறப்பாகக் கூறக்கூடியவைகளாகும்.

மனிதப் பலவீனங்களை பயன்படுத்தி இலக்கியம் என்ற பெயரில் செயாகுசான வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்காமல் வாசகர்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதை விடுத்து, எதனை விரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அவற்றை ‘மல்லிகை’ இதழ் போலமுறிப்படுத்தி தரமான வாசகர் கூட்டத்தைப் பெருக்கியது.

‘மல்லிகை’ இதழ் ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தோண்டாற்றி வருகிறது. சராசரி வாசகர்களை இலக்கியத் தரத்திற்கு உயர்த்தும் பணியைச் செய்து வருகிறது. இனவிரோதம், சாதி உணர்வுகளற்ற சமுதாய பணிகளோடு உலகளாவிய உயர்ந்த நோக்கங்களை இளஞர்களுக்கு உணர்த்தி வருகிறது.

“இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயக்க போகம் குறைந்த போலையில் முற்போக்கு இலக்கியப் பணியினைத் தொடர்ந்து செய்வதற்கென டொமினிக் ஜீவா மல்லிகை சஞ்சிகையினை ஆரம்பித்தார்”. என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

‘மல்லிகை’ பல சிறப்பிதழ்களையும், ஆண்டு மலர்களையும் வெளியிட்டுள்ளது. சோவியத் குடியரசின் ‘யுகப்பிரட்சி’ சிறப்பிதழ், இலங்கையரங்கான் சிறப்பிதழ், துறையப்பாப்பிள்ளை பாவலரின் நூற்றாண்டு போனவு இதழ், மலையகச் சிறப்பிதழ், பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழ், கைலாசபதி சிறப்பிதழ், முல்லைச் சிறப்பிதழ், கிளி டோச்சி மாவட்ட சிறப்பிதழ், மாத்தளை மாவட்ட சிறப்பிதழ், ஆஸ்திரேலிய சிறப்பிதழ் மற்றும் மல்லிகை வெள்ளி விழா மலர் (1990) முதலியவற்றையும் வெளியிட்டுள்ளது.

‘மல்லிகை’ இதழ்களின் அட்டைப்படங்களை அங்கீகரித்தவர்கள் போவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள், கவிஞர்கள், போடகாசிரியர்கள், ஓவியர்கள், இசை மேதைகள், சிற்பக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலதிறப்பட்டவர்களாவர். மேலும் அவர்களைப் பற்றிய கட்டுரையும் அந்த இதழில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கவிஞர் முருகையன், எம்.ஏ.நுஃமான், கலாநிதி க.அருணாசலம், தெணியான், பேராசிரியர் போ.சுப்பிரமணியன், டாக்டர் ச.முருகானந்தன், பேராசிரியர் செபா.ஜெயராசா, எஸ்.சிவகுமாரன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், செ.நயாகோதன், புதுவை இரத்தினதுரை, பேராசிரியர் மௌனகுரு உட்பட பல இலக்கியத் திறனாய்வாளர்களும், படைப்பாளிகளும், கவிஞர்களும் மல்லிகை இதழ்களில் எழுதியுள்ளனர்.

மல்லிகை இதழ்களில் ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர்களான, கவிஞர்.கல்வயல் போ.குமாரசாமி, அலை அ.யேசுராசா, சண்முகம் சிவலிங்கம், மேமன்கவி, சோலைக்கிளி, கருணாகரன், வாசுதேவன், அன்பு முகதீன், துறவி, கவிஞர் சோ.பத்மநாதன் உட்பட பல கவிஞர்களின் கவிதைகள் வெளியாகியுள்ளன.

‘மல்லிகை’ இதழில் ஏறத்தாழ 700 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மேலும், மலையாளம், சிங்களம், ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சிறுகதைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மல்லிகை இதழில் வரதர், போந்தி, குறமகள், செம்பியன் செல்வன், செ.நயாகோதன், செங்கை ஆழியான், செ.கெணசலிங்கன், அ.முத்துலிங்கம், திக்குவல்லை கமால், பை.முருகபூபதி, தெணியான், சட்டநாதன், ப.ஆப்டீன், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், மாத்தளை சோமு, யோகேஸ்வரி, எஸ்.சிவகுமாரன், சிவராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

‘மல்லிகை’ இதழ் ஈழத்து சமகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் வளர்ச்சிப் போக்கை பிரதிபலித்து வந்துள்ளது.

“சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் இடதுசாரி சிந்தனைகளுக்கு ஏற்பட்ட பல்வேறு போருக்கடிகளின் காரணமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்க முடியாத போலையிலும் தளராது, அச்சிந்தனையை விட்டுக் கொடுக்காது முற்போக்கு இயக்கத்தின் உயிர்ப்பை எடுத்துக் காட்டும் வகையில் ‘மல்லிகை’யை டொமினிக் ஜீவா போடத்தி வந்துள்ளார்.” என மேமன்கவி பதிவு செய்துள்ளார்.

தமிழ் ஆக்க இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ‘மல்லிகை’ ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பு என்னவெனில் வளரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்குத் தனது இதழில் களம் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததேதான். என எழுத்தாளர், விமர்சகர் ஜ.ஆர்.அரியரத்தினம் தமது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

‘மல்லிகை’யினூடாக தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை மட்டுமல்ல. இந்த போட்டுத் தமிழ் பேசும் மக்களின் சமகால வாழ்க்கை போலை மாற்றங்கள் கூட வருங்காலச் சரித்திர ஆய்வுகளுக்கான ஆதாரப்பூர்வமான தரவுகளாக அமையும். இந்த போட்டுத் தமிழ் இலக்கிய படைப்பாளிகளிடையே, ஆழ்ந்த சமூகப் பார்வையோடு எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்ததிலும், தார்மீகப் போறுப்புணர்வோடு எழுத வேண்டுமென்ற துடிப்பை ஏற்படுத்தியதிலும் மல்லிகைக்கும், ஜீவாவுக்கும் கணிசமான பங்கு உண்டு.” என ஈழத்து எழுத்தாளர் யோக பாலச்சந்திரன். ‘மல்லிகை’ இதழின் சிறப்பு குறித்து பதிவு செய்துள்ளார்.

நூல்கள்

டொமினிக் ஜீவா தமிழுலகிற்கு படைத்து அளித்துள்ள நூல்கள்: சிறுகதத் தொகுதிகள் பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், தண்ணீரும் கண்ணீரும் (இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நூல்), ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல் (பேட்டிகள், செய்திகள்), டொமினிக் ஜீவா சிறுகதைகள் (50 சிறுகதைகளின் தொகுப்பு), தலைப்பூக்கள் (மல்லிகைத் தலையங்கங்கள்), முன்னுரைகள் –சிறு பதிப்புரைகள், அட்டைப்பட ஓவியங்கள் (கட்டுரத் தொகுப்பு நூல் மூன்று தொகுதிகள்), எங்களது போனவுகளில் கைலாசபதி (கட்டுரத் தொகுப்பு), மல்லிகை முகங்கள் (கட்டுரத் தொகுப்பு), பத்தர பிரசூத்திய (சிறு கதைகள் சிங்கள மொழி பெயர்ப்பு) அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைமகரங்களில் 30 போட்கள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (சுய சரிதம்), Undrawn Portrait For Unwritten Poetry (மொழிபெயர்ப்பு கெந்தையா குமாரசாமி) முதலிய நூல்களாகும்.

மல்லிகை சிறுகதைகள் (தொகுதி-ஒன்று இத்தொகுதியில் 30 சிறுகதைகளும்), மல்லிகைச் சிறுகதைகள் (தொகுதி –இரண்டு இத்தொகுதியில் 41 சிறுகதைகளும்) இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதத் தொகுதிகளை தொகுத்து வழங்கியவர் ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியான்.

Post a Comment

0 Comments