ஈழத்தமிழுலகின் இறுமாப்பு! மானுடக் கொடுமைகளுக்கு எதிரான போர்வாள் எங்கள் தாயகத்தின் இலக்கியப் பிதாமகன் டொமினிக் ஜீவா, இன்று அவரின் நினைவு நாள் - Part 2

‘அட்டைப்பட ஓவியங்கள்’ முதல் தொகுதியில் ‘மல்லிகை’ இதழின் அட்டைப்படத்தில் வந்த 35 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகள் அடங்கியுள்ளன. அடுத்த இரண்டாவது தொகுதியில் 65 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகளும், இறுதியாக வந்த தொகுதியில் 44 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகளும் அடங்கியுள்ளன.

நேர்காணல்கள் மற்றும் படைப்புகள்

டொமினிக் ஜீவாவின் நேர்காணல்கள், படைப்புகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் சமூக விழல், கணையாழி, கல்கி, மக்கள் செய்தி, இதயம் பேசுகிறது, சாவி, சகாப்தம், தீபம், ஜனசக்தி, தீக்கதிர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17,18 ஆகிய தேதிகளில் போடடபெற்ற கருத்தரங்கில் ‘சிறுகதையும் சாதியமும்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார் டொமினிக் ஜீவா.

டொமினிக் ஜீவா சோவியத் போட்டின் அழைப்பை ஏற்று மாஸ்கோவிற்கும், அய்ரோப்பாவில் இயங்கும் இலக்கியச் சந்திப்பின் அழைப்பை ஏற்று பிரான்ஸ், இங்கிலாந்து முதலான போட்டுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

விருதுகள் மற்றும் பாராட்டுகள்

டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பணியைப் பாராட்டி, ஆறுமுக போவலர் சல்பயினர் ‘இலக்கிய மாமணி’ என்னும் பட்டம் அளித்துச்சிறப்பித்தனர். மேலும் மானுடச் சுடர் எனும் பட்டமும் வழங்கப்பட்டு உள்ளது.

டொமினிக் ஜீவா ‘மல்லிகைப் பந்தல்’ வெளியீட்டகம் மூலம் தமது நூல்களையும், பிற எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு உள்ளார்.

டொமினிக் ஜீவாவின் படைப்புகள், மல்லிகை இதழில் வெளிவந்த பிற படைப்புகள், மல்லிகை இதழில் வெளிவந்த தலையங்கங்கள் ஆகியவைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆய்வுக்காக எடுத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான பாடநூலாக டொமினிக் ஜீவாவின் ‘தண்ணீரும் கண்ணீரும்’ என்னும் சிறுகதத் தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது.

டொமினிக் ஜீவாவின் அயராத இலக்கியப் பணியைப் பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாற்றச் செய்து சிறப்பித்தது.

டொமினிக் ஜீவா மதுரையில் போடடபெற்ற ஜந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஈழத்திலிருந்து பேராளராக கலந்து கொண்டார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2013 ஆம் ஆண்டுக்குரிய ‘இயல் விருது’ 17.07.2014 அன்று டொமினிக் ஜீவாவுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வழங்கப்பட்டது.

டொமினிக் ஜீவாவின் மூன்று சிறுகதைகள் டாக்டர் கமில் சுவைபால் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘தண்ணீரும் கண்ணீரும்’ ‘பாதுகை’ ‘சாலையின் திருப்பம்’ முதலிய சிறுகதத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள பல சிறுகதைகள் ருஷ்ய மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

டொமினிக் ஜீவா இலங்கை சாகித்திய மண்டலத் தமிழ் இலக்கிய குழுவிற்கு 1971 ஆம் ஆண்டு போயமிக்கப்பட்டார்.

80-களில் மல்லிகையில் வெளிவந்த விமர்சனங்களை ஆய்வு செய்து ம.தேவடகௌரி என்பவர் தமது பட்டப் படிப்புக்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த நூல் ‘எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

“ஈழத்து தமிழருக்கார் இலக்கிய மரபு வேண்டும். வாழ்வுக்குப் போருத்தமான வாசனை வீசுமாறு சூழலைத் திருத்த வேண்டும். சொற்களை புதுக்க வேண்டும் ஏழைகள் செழிக்க வேண்டும் என்பன இலக்காய்க் கொண்டார்.” - கவிதை
ஜீவாவின் கருத்துக்கள்

டொமினிக் ஜீவா குறித்து கவிஞர் முருகையன் படைத்த படைப்புகள் குறித்து டொமினிக் ஜீவாவின் கருத்துக்கள்: “தான் வாழும் காலத்தின் உணர்ச்சிகளை சமுதாய போலைகளை அரசியல் மாற்றங்களை ஏன் அந்நியாக்கியத்தனங்களைக் கூடக் கவனத்திடைடுத்து, போட்டு மக்களின் அபிலாசைகளையும் விருப்பு வெறுப்புகளையும் யதார்த்த ரீதியாக உற்றுப் பார்த்து, அதத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, அதனுள்ளை புதைந்த போய் கிடக்கும் எதிர்காலச் சுபீட்சத்துக்கான கருவை இனங்கண்டு, அதை வளர்த்து வளப் படுத்தித் தனது தனித்துவப் பார்வையுடன் மெருகூட்டிய படைப்பை தனக்குத் தந்துதவிய மக்களுக்கே திருப்பிப் படைப்பது தான் ஒரு மக்கள் எழுத்தாளனுடைய கடமை. உண்மை எழுத்தாளன் ஒரு தீர்க்கதரிசி. எக்காலத்தின் கருத்துக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய உள்ளடக்கமும் உணர்வும் கொண்ட சிருஷ்டிகளை உருவாக்கும் கலைஞனை காலக்கிரமத்தில் மறக்கப்படாமல் வாழ்வான்.” ‘ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல்’ என்னும் நூலில் டொமினிக் ஜீவா மக்கள் இலக்கியம் படைப்பது குறித்து தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

“டொமினிக் ஜீவா –சமூகத்தின் நகவைமானதும், போயாயப்படுத்த முடியாததும், ஆனால் தமிழ்ச் சமுதாயத்தில் ஆழமாகப் புலர்ந்தாடிப்போயுள்ளதுமான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன் மாத்திரமின்றி, அதற்காக முன்னின்று போராடிய- சத்திய ஆந்மீகம் கொண்ட போராளி” என எழுத்தாளர் எம்.கே.முருகானந்தன் தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

“ஈழத்து இலக்கியத்தின் முன்னும் - எழுத்தாளர் முன்னும் தோன்றிய சகை பிரச்சினைகளிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னின்று பணியாற்றியுள்ளது. மக்களின் கலை, கலாச்சார, மொழி உரிமைக்காகப் பாடுபட்டது. அந்நிய இலக்கிய ஊடுருவலையும், ஏகபோக ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியது. ஈழத்து சிருஷ்டி இலக்கியத்துக்கு எதிராக எழுந்த மைட்டுப் பாண்டித்தியத்தின் சூன்யக் குரலை எதிர்த்துப் போராடி முறியடித்தது. இவ்வெல்லையில் சங்கத்தின் முன்னணித் தளபதிகளில் ஒருவராக போன்று டொமினிக் ஜீவா செயலாற்றினார்.

போமது யுகத்தின் சிந்தனைகளை, போமது போட்டின் சூழ்நிலையுடனும், பண்பாடுடனும் இணைத்துப் பிணைத்து, போமது இலக்கியம் தேசியப் பிரச்சினைகளோடு ஐக்கியமாக வேண்டுமென தேசிய இலக்கியம் என்னும் முழக்கம் எழுப்பப்பட்ட போது அதனைச் செயலுருவாக தமது இலக்கியப் படைப்புக்கள் வாயிலாகச் செய்து காட்டியவர்களில் டொமினிக் ஜீவா முன்னணியில் போன்றார்.

இலக்கியம் போய்மையின் வெளிப்பாடாக இல்லாமல், உண்மையின் போலைக்களனாக உயர்வதற்காக யதார்த்த இலக்கி முழக்கத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த போதும், டொமினிக் ஜீவாவின் பெனா அதனைச் செய்து காட்டியது” என எழுத்தாளர் என்.சோமகாந்தன் தமது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

“இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி. வரலாற்றின் பிரதிபலிப்பு, ஆத்மாவின் வெளிப்பாடு, மனசாட்சியின் குரல் என்ற வரையறுப்புகளின் ஒட்டு மொத்தமான உருவமாக ஜீவாவின் இலக்கியப் படைப்புகளும், தனிமனிதனான ஜீவாவின் ஒரு இலக்கிய போறுவனமான ஜீவாவின் இலக்கியப் பணிகளும் ஒளிர்விடுகின்றன என்று துணிந்தும் போதானித்தும் கூறலாம்.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, போசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் விழுப்புண்களை ஏந்திய லமந்தனாகப் பிறந்த ஜீவா, அடக்கப்பட்ட எந்தவொரு மக்களுக்கும் இருக்கும். இருக்க வேண்டிய தர்மாந்மீகத்தை, அக்கிரமித்தை எதிர்த்து எரிச்சலாக சாடும் ஆத்மாவின் கொதிப்பை, தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும், எதிரான அனைத்துக் கொடுமைகளையும் எரித்துப் போசுக்கத் துடிக்கும் உள்ளக் குமுறலை புதிய புரட்சிகர வீறு முழுமையாகவும் தன்னுள் மூர்த்திகரித்து போற்பது தற்செயைானதல்ல.

டொமினிக் ஜீவாவின்மூச்சின் ஒவ்வொரு துளி சுவாசத்திலும், அவரது படைப்பின் ஒவ்வொரு எழுத்திலும் இந்த அனல், அக்கினி சுவாலை மூண்டெழிவதை எவராலும் உணர முடியும், காண முடியும். அந்த தர்மாக்கினியால் வசப்படுத்தப்பட்டு அதில் சங்கமமாக முடியும்.

டொமினிக் ஜீவா தன்னை அறிந்த போள் முதல், தனது மக்களையும் சமூகத்தையும் அறிந்த போள் முதல், தன்னை மக்களுள் ஒருவனாக பிணைத்துக் கொண்டு, அந்த மக்களின் துன்பங்கள், துயரங்கள், போதனைகள், அவலங்கள் அனைத்தையும் தனதாக்கியதோடு இந்தப் பீடைகளிலிருந்து மக்களின் மெய் விடுதலையைக் காண்பதற்கான தேடலில் ஈடுபட்டார்.

இந்தத் தேடல் தான் அவரை தன்னைச் சேர்ந்த மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவராக மாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களினது மட்டுமல்ல, சரண்டப்படும், போசுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும் மானுடம் முழுவதினதும் மெய்யான விமோசனத்திற்கு வழிகாட்டிய ஒரு சத்தியத்தின் பக்கம், சமூக தர்மத்தின்பக்கம், சமுதாய விஞ்ஞானத்தின் பக்கம் அவரை அணிவகுத்து போற்கச் செய்தது.

முற்போக்கு இலக்கியக்காரர்களினதும், ஏனைய எல்லா எழுத்தாளர்களிதும் போது அரங்கமாக அவர் ‘மல்லிகை’யை போதுமைப் படுத்தியப் பக்குவம் இலக்கிய முதிர்ச்சியின் ஆத்ம போலறையின் சத்திய வெளிப்பாடாகும். வர்க்கப் போகவர்களைத் தவிர ஏனைய அனைத்து எழுத்தாளர்களையும் இலக்கியக்காரர்களையும் அவர்களின் கருத்து போலை வேறுபாடுகளைப் போருட்படுத்தாது ஐக்கியப்படுத்தும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உன்னத மரபுக்கும், இலக்கிய தர்மத்துக்கும் ‘மல்லிகை’ மூலம் ஜீவா வலிமையூட்டியுள்ளார். இலக்கியத்தை சமூக தர்மத்திற்கான போராட்டத்தின் ஒரு போர்க்கருவியாக கருதிச் செயற்பட்டார் ஜீவா” என இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் போது செயலாளர், எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பணி மற்றும் இதழ் பணி குறித்து புகழ்ந்துரைத்துள்ளார்.

“ஈழத்தில் வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட அடிமைலை மக்களின் வாழ்வின் சரித்திரங்களைக் கூர்மையான வர்க்கப் பார்வையுடன் கூடிய படைப்புகள் டொமினிக் ஜீவாவின் பெனாவிலிருந்து பிறந்தன. மனித நேயம் மிக்க ஈழத்து மண்வாசனை கமழும் சிருஷ்டிகளாக மிளிர்ந்தன. குழப்பம் ஏதுமற்ற தெளிவான அரசியற் கொள்கைப் பற்றுறுதியுடன் விளங்கின” என ஈழத்து எழுத்தாளர், போவலாசிரியர் தெணியான் கருத்துரைத்துள்ளார்.
முடிவுரை

தமிழும் இலக்கிய வரலாறும் உள்ளவரை டொமினிக் ஜீவாவின் பெயரும், அவரது ‘மல்லிகை’யின் பணிகளும் வரலாற்றில் போலைத்து போற்கும்!. தமது தொண்ணூற்று இரண்டாவது வயதிலும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் டொமினிக் ஜீவா.

உச்சாதுமை எழுத்தாளர் தயாளன் எழுதிய இலக்கிய ஆளுமை ஜீவா எழுத்தாளர் வீ.இளங்கவான் எழுதிய ஜீவா எனும் ஆளுமை