elugai

மாவிலாறு போல மாறிய தையிட்டி விவகாரம்: ஜனாதிபதியின் கருத்துக்கள் இனவாதத்தை தூண்டுகிறதா?

மாவிலாறு போல மாறிய தையிட்டி விவகாரம்

-கண்ணன்
தைப்பொங்கல் விழா மற்றும் அரச நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அங்கு வெளிப்படுத்திய சில கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது. அவர் தனது ஆட்சியை, வடக்கில் உள்ள தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நிறுவுவதற்கு முயன்றிருந்தார்.
Sri Lanka Politics and Protests

யாழ்ப்பாண விஜயத்தின் போது ஜனாதிபதியின் கருத்துக்கள் எழுப்பியுள்ள விவாதங்கள்

ஆனால் அவர், வடக்கில் உள்ள எந்த பிரச்சினைகளையும் கண்டு கொள்ளவில்லை. எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வை முன் வைக்கவில்லை. காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, போர்க்கால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினை என நீண்டு செல்லும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதில் எதையும் கொடுக்கவில்லை.
தையிட்டி விகாரை: ஒரு தீராத பிரச்சினை
அண்மைக்காலத்தில் அரசாங்கத்திற்கு சவாலான ஒரு விடயமாக இருந்து வருவது, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டடமாகும். இது தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள ஒரு விகாரை. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த விகாரையை அகற்றி, காணி உரிமையாளர்களிடம் காணிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
"தையிட்டி விவகாரம் இப்போது தீவிர அரசியல் மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு விட்டன. கிட்டத்தட்ட மாவிலாறு விவகாரம் போல இது ஊதிப் பெருப்பிக்கப்படுகிறது."
குற்றப்புலனாய்வு விசாரணை எச்சரிக்கை
காணி உரிமைக்காக விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துகின்றவர்களுக்கு அங்கு காணி இருக்கிறதா என்று விசாரணை நடத்துமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். இது தமிழர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடு. போராட்டம் நடத்துபவர்களின் பின்னணியை ஆராயுமாறு கூறுவது ஒரு மோசமான உரிமை மீறல்.
Police and Surveillance Concept

ஜனநாயகப் போராட்டங்கள் மீது ஏவப்படும் புலனாய்வுப் பிரிவு அச்சுறுத்தல்கள்

பேரினவாதத்தின் எழுச்சியும் அரசாங்கத்தின் தந்திரமும்
ஜனாதிபதி ஒரு பக்கம் தமிழர்களை அச்சுறுத்திக் கொண்டு இன்னொரு பக்கம் சிங்கள பௌத்த தேசியவாதிகளையும் எச்சரிக்கிறேன் என்று காட்டிக் கொள்ள முயன்றார். இது சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் தூண்டி விடப்படவே வழிவகுத்துள்ளது. எந்த பேரினவாதத்திற்கு எதிராகத்தான் செயல்படுவதாக கூறிக் கொண்டாரோ, அதே பேரினவாதத்தை அவர் தட்டி எழுப்புகின்ற வேலையைத் தான் செய்திருக்கிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கம் தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதை தாமதிக்கலாம். காலத்தை இழுத்தடிப்பது அரசாங்கத்துக்கு சாதகமானது. ஜனாதிபதியின் கருத்தானது, தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணாமல் காலத்தை இழுத்தடிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
Buddist Temple in North Sri Lanka

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் அமைக்கப்படும் விகாரைகளும் தமிழ் மக்களின் எதிர்ப்பும்

Post a Comment

0 Comments