சிறார் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் அடிபடும் மோடியின் ஆட்டம்...
உலகத்தையே உலுக்கும் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ (Epstein Files) என்னும் மின்னஞ்சல் ஆவணங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்காகக் கடத்தி, அவர்களை முக்கியப் பிரமுகர்களுக்கு இரையாக்க, சர்வதேச அளவில் பெரிய வலைப்பின்னலை ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் பாலியல் குற்றவாளி உருவாக்கியது கண்டறியப்பட்டிருக்கிறது.
குழந்தைகளின் உடலைக்கூடக் கறியாக்கித் தின்றிருக்கிறார்கள் என்னும் மனித சமூகத்தையே குலை நடுங்க வைத்திருக்கும் செய்திகள் எல்லாம் வெளியாகின்ற இந்த ஆவணத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் X தளத்தின் எலான் மஸ்க் வரையிலான புகைப்படத் தொடர்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளன. இந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் பெயரும் இருப்பது இந்தியாவையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அமெரிக்காவின் நிதி ஆலோசகர் மற்றும் பெரும் பணக்காரனாக இருந்தவன். தன்னுடைய தரகு வேலைக்காகப் பல பணக்காரர்கள் நிறைந்த சமூக வட்டத்தை உருவாக்கி, சிறு வயதுப் பெண்களைப் பாலியல் ரீதியான நோக்கில் அவர்களிடம் அனுப்பி இருக்கின்றான். சிறார் பாலியல் கடத்தல் குற்றவாளியாக மட்டுமல்ல, ஆயுத பேர முகயத்தின் தலைவனாகவும் இருந்துள்ளான் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
இஸ்ரேலின் உளவாளியாக, இஸ்ரேலுக்கும் மேற்குலக நாடுகளுக்குமான தரகனாக இருக்க, நாடுகளின் முக்கியப் பிரமுகர்களைத் தன்னுடைய தீவிற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சிறுமிகளைப் பாலியலாகப் பேரம் பேசும் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான். இவனின் இக்கொடிய செயல் வெளிவந்ததும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவன் 2019-ல் சிறையில் தற்கொலை செய்து கொண்டான் எனக் கூறப்பட்டது. அது தற்கொலை அல்ல கொலை என்னும் சர்ச்சையும் நீடிக்கிறது.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: மோடி மற்றும் அம்பானி பெயர்கள்
கடந்த ஜனவரி 30, 2026-ல் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் பக்கங்கள், 2,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், 1.8 லட்சம் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களில் குறிப்பாக வலதுசாரி, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், பெரும் பிரமுகர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பில் கிளிண்டன், டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க், பில் கேட்ஸ், மோடி போன்றவர்களின் பெயர்களும் இருப்பது குறித்தே இப்போது கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக எப்ஸ்டீன் மற்றும் அம்பானி இடையேயான உரையாடல் இன்று பெரும் விவாதப்பொருளாகி இருக்கின்றது. இந்த உரையாடல்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் நடைபெற்றதாகச் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியான ஆவணங்களின்படி இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே ஒரு இடைத்தரகராக எப்ஸ்டீன் நேரடியாகப் பங்கு வகித்திருக்கிறான். இதற்குப் பிறகே இஸ்ரேலுக்கு மோடி சென்றது அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டதும், வழக்கத்திற்கு மாறாக இஸ்ரேலிய தலைவர்களுடன் தொடர்பு கொண்டதும், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டதும் நிகழ்ந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மின்னஞ்சலில் இருந்த அதிர்ச்சித் தகவல்கள்
ஜூலை 6, 2017 அன்று, மோடி இஸ்ரேலுக்குச் சென்றபோது ஜெபர் (‘Jabor Y’) என்ற நபருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றான் எப்ஸ்டீன்.
“இந்திய பிரதமர் மோடி ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்… அமெரிக்க ஜனாதிபதியின் நலனுக்காக இஸ்ரேலில் கொண்டாடினார்.” (“Modi took advice and danced and sang in Israel for the benefit of the US president…”)
அதே நாளில், அம்பானிக்கு “உங்கள் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது…” என்று குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறான் எப்ஸ்டீன். மேலும் அமெரிக்காவிற்கும் பாஜக அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்பை உருவாக்கப் பல ஆண்டுகளாக முயற்சி செய்திருக்கிறான் எப்ஸ்டீன்.
ஜூன் 2014-இல் மோடி முதன்முதலில் ஆட்சிக்கு வந்தவுடன், எப்ஸ்டீனின் இல்லத்தில் முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுத் பராக் மற்றும் அமெரிக்காவின் செயலாளர் லாரி சம்மர்ஸ் உடன் மூத்த பாஜக தலைவரான ஹார்டீப் சிங் பூரி சந்தித்ததாக வெளியாகும் செய்திகளும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன.
ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் அனில் அம்பானி
மார்ச் 16, 2017 அன்று, மோடி அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த அனில் அம்பானி எப்ஸ்டீனுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறார். “மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக டிரம்பின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள நபர்களுடன் தொடர்பு கொள்ள ‘தலைமை’ அவரது உதவியைக் கேட்பதாக” அந்தச் செய்தி இருக்கின்றது.
இந்தியா-பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் இணைந்து தயாரித்த 36 ரஃபேல் ஜெட் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்குள்ளாகவே அம்பானிக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் இடையேயான சந்திப்பு திட்டமிடப்பட்டது. இந்த பின்னணியில்தான் ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம்: யாருக்கு லாபம்?
மோடியின் தொடர்பு குறித்த ஆவணங்கள் வெளியானதும், அவசர அவசரமாக அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதற்கு, இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக டிரம்ப் குறைத்தார் என்னும் காரணம் சொல்லப்பட்டது. அதே வேளையில் அமெரிக்கத் தொழில்துறை மற்றும் வேளாண் பொருட்களுக்கான இறக்குமதி வரி 0% ஆகியிருக்கிறது.
விவசாயிகளைப் பெரும் அளவில் பாதிக்கும் என்று கூறி அமெரிக்காவின் விவசாயப் பொருட்களுக்கு அனுமதி மறுத்து வந்த மோடி அரசு, இப்போது 0% இறக்குமதி வரியோடு அவற்றை இந்திய சந்தையில் அனுமதித்து இருக்கின்றது. இதனால் இந்திய விவசாயிகளின் தற்கொலை இன்னும் பெருகும்.
டிரம்ப் கூறுகையில்: “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக் கொண்டார். அதற்குப் பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் கொள்முதல் செய்ய உள்ளார். அதுமட்டுமின்றி 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவில் இருந்து வாங்குவதாக உறுதி அளித்துள்ளார்.”
பிம்பம் உடையும் தருணம்
ஒரு சிறார் பாலியல் குற்றவாளியின் மின்னஞ்சலில் மோடியின் பெயர் இருப்பதாகக் கூறப்படுவதும், அனில் அம்பானியின் வர்த்தகத்திற்காக மோடி டிரம்பிடம் நடனம் ஆடியதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதும் மோடியின் பிம்பம் உடையத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. இந்திய மக்களின் நலன், குஜராத்தி பனியா மார்வாடி பெரு நிறுவனங்களின் வணிகத்திற்காக அமெரிக்காவிற்கு அடகு வைக்கப்படுவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் ஆவணங்கள் குறித்தும் அமெரிக்க-இந்திய ஒப்பந்தம் குறித்தும் எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் மிகப்பெரிய அளவில் பேச வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஆனால் இதைப் பேசாமல் சிலர் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இதை அம்பலப்படுத்த வேண்டிய இந்திய ஊடகங்களோ மோடி அரசால் விலைக்கு வாங்கப்பட்டதால் வாய்மூடி இருக்கின்றன.
எதிர்க்குரல் எழுப்புவோம்!
‘நாட்டின் இறையாண்மை என்பது ஒரு தனி மனிதனின் பலவீனத்திற்காகப் பலியிடப்படலாமா’ என்று மக்கள் எதிர்க்குரல் எழுப்புவதே இந்த அநீதிக்கான எதிர்வினையாக அமையும். பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பின் போலி தேசபக்தியை அம்பலப்படுத்துவோம். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் இறையாண்மையை மீட்டெடுப்போம்.





0 Comments