இன்று வள்ளுவர் ஆண்டு 2057-ஆம் ஆண்டு ஜனவரி 14 – தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள், உழவர் திருநாள், தைப்பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
தமிழ் மண்ணின் வயல்களில் பொங்கி வழியும் பாலும், சாதனையில் பொங்கி எழும் இனிப்பும், உழவர்களின் உழைப்பில் பொங்கும் நம்பிக்கையும் – இவைபயல்லாம் இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் ஒரே நேரத்தில் பொங்குகின்றன.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெருந்தகவலை இன்று நாம் மீண்டும் நினைவுகூர்கிறோம்.
- ✔ அடக்குமுறைகள் மறையட்டும்,
- ✔ அநீதிகள் அழியட்டும்,
- ✔ தமிழ் இனம் தலைநிமிர்ந்து நிற்கட்டும்,
- ✔ தமிழீழ விடுதலைக் கனவு நனவாகட்டும்!
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் தருணத்தில், தமிழ் இன உணர்வை, ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றை, சர்வதேச அரசியல் உண்மைகளை, மனிதநேயத்தை, தமிழ்த் தேசிய அடையாளத்தை எழுதி, பதிவு செய்து, உலகிற்கு எடுத்துவைக்கும் ஒரு சிறிய முயற்சியாக – எழுகை செய்தி (Elugai News) என்ற பெயரில் எனது வலைப்பூவை இன்று உங்கள் முன் அறிமுகம் செய்கிறேன்.
இணைப்பு: elugainews.blogspot.comஇது வெறும் blog அல்ல – தமிழர்களின் குரலாக ஒலிக்கும் எழுகை மேடை. இங்கு நாம் பேசுவோம், எழுதுவோம், நினைவுகூர்வோம், எதிர்காலத்தை வடிவமைப்போம். உங்கள் ஆதரவு, வாசிப்பு, பகிர்வு, கருத்துக்கள் அனைத்தும் இதற்கு உயிர் தரும் என்றே நம்புகின்றேன்.
இனிய தமிழர் திருநாள்!
தைத்திருநாள் வாழ்த்துக்கள்!
பொங்கலோ பொங்கல்!
தமிழ் மண்ணும் தமிழ் மக்களும் என்றும் வெல்லட்டும்!
எழுக! எழுக! தமிழமே எழுக!
இவன்,
கிருஸ்னா அம்பலவாணர்
@krishnaambalav1


0 Comments