தலைவர் "பிரபாகரன்" அவர்களை களங்கப்படுத்தும் "ஆரியபால ஜதீந்திரா"வுக்கு ஒரு தெளிவான எதிர்வினை!
எழுகை இதழ் அன்புள்ள தமிழ் மக்களே!
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு, எண்ணற்ற தியாகங்களாலும், இரத்தத்தாலும், அர்ப்பணிப்பாலும் எழுதப்பட்டது. தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில், விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் இருப்புக்காக, இன அழிப்புக்கு எதிராக, தமிழீழத் தாயகத்தின் சுதந்திரத்துக்காக நடத்திய போராட்டம், உலக வரலாற்றில் என்றும் மறக்க முடியாத அத்தியாயமாக நிற்கிறது.
எமது மாவீரர்கள், தங்கள் இளமையையும், உயிரையும், குடும்பத்தையும் தியாகம் செய்து, தமிழ் மண்ணின் மீது அளவற்ற அன்பு செலுத்தி, எமது தேசத்தின் எதிர்காலத்துக்காகப் போராடி வீழ்ந்தனர். அவர்களின் தியாகம் வீண் போகவில்லை. அது தமிழ் மக்களின் உள்ளங்களில் நித்தியமாக எரியும் விடுதலை நெருப்பாக மாறியுள்ளது. தலைவர் பிரபாகரன் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், தெளிவான தலைமையும், எமது மக்களை ஒன்றிணைத்து, உலக அரங்கில் தமிழரின் குரலை ஒலிக்கச் செய்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் - எண்ணற்ற தியாகங்களாலும், இரத்தத்தாலும், அர்ப்பணிப்பாலும் எழுதப்பட்ட வரலாறு. (புகைப்படம்: History Net)
திடீர் மாற்றத்தின் பின்னணி
ஆனால் இன்று, ஒரு காலத்தில் புலிகளுடன் பயணித்து, பொங்குதமிழ் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியவரும், புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று உரக்கக் குரல் கொடுத்தவரும், மானுடத்தின் தமிழ்கூடல் நிகழ்வில் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் இணைந்து கொழும்பில் பங்கேற்றவருமான ஆரியபால ஜதீந்திரா அவர்கள், திடீரென திரும்பி எமது போராட்டத்தையும், புலிகளையும் கடுமையாக விமர்சித்து, வசைபாடி வருகிறார்.
இந்தத் திடீர் மாற்றத்தின் பின்னணி என்ன? புலிகளின் பிரதேசங்களுக்குள் சென்று மக்கள் சந்திப்புகளை நடத்தியவர், இன்று அதே புலிகளை எதிர்த்து நிற்பதன் மர்மம் என்ன? இது உண்மையான சிந்தனை மாற்றமா? அல்லது இந்திய – இலங்கை அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயல்படும் ஒரு திட்டமா?
இன்று அவர் செய்வது இன்னும் ஆபத்தானது
தமிழ் மக்களுக்கு எந்த விளக்கமும் இல்லாத 13ஆம் திருத்தத்தின் முன்வரைபுகளை அரசுகளின் சார்பில் திணிக்க முயல்கிறார். "மக்கள் மறுவாழ்வு" என்ற போர்வையில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து திரட்டிய நிதியை முழுமையாக மறுவாழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல் மோசடி செய்ததாக எழும் குற்றச்சாட்டுகள். வடக்கு – கிழக்கு மக்களிடையே பிரதேசவாத உணர்வுகளை தூண்டி, தமிழ் மக்களின் ஒற்றுமையை சீரழிக்க முயல்கிறார். இந்திய ஊடகவியலாளர்களிடம் புலிகள் பற்றி தவறான, ஒருதலைப்பட்சமான தகவல்களைப் பரப்பி, எமது வலிமிகுந்த போராட்ட வரலாற்றை களங்கப்படுத்த முயல்கிறார். இவை அனைத்தும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும், நீண்டகால விடுதலை இலட்சியத்துக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.
IPKF (இந்திய அமைதிப் படை) இலங்கையில் 1987. "அமைதி" என்ற பெயரில் வந்து தமிழ் மக்கள் மீது பல அட்டூழியங்களை புரிந்தது.
ஆரம்பகால உறுப்பினர்களின் தெளிவான நிலைப்பாடு
நாங்கள், தலைவர் வே. பிரபாகரனுடன் இணைந்து 1979 முதல் 2009 வரை பயணித்த ஆரம்பகால உறுப்பினர்கள் என்ற முறையில், ஒன்றை தெளிவாகக் கூறமுனைகின்றோம்: எமது போராட்டத்தில் தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால், அது தமிழ் மக்களின் இருப்புக்காக, இன அழிப்புக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு வரலாற்றுப் போராட்டம். எமது மாவீரர்களின் தியாகத்தையும், தலைவரின் அர்ப்பணிப்பையும் இன்று அவரை ஏற்றுக்கொண்டு பயணித்த ஆதரவாளர்களே திரும்பித் தாக்குவது, எமது தேசத்தின் வரலாற்றை மாற்றி எழுத முயல்வது போன்றது.
உங்கள் "மாற்று சிந்தனை"க்கு மரியாதை. ஆனால், அதன் பெயரால் தமிழ் மக்களின் தியாகங்களை அவமதிப்பதும், வெளிநாட்டு மற்றும் அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயல்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜதீந்திரா அவர்களே — நேரடியான பதில்
யாரும் யாருக்கும் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. காரணம் எமது மக்கள் தமக்கான விடுதலையை தம் தோளில் சுமந்தவர்கள். அந்த மக்கள் தம் தேசத்து வரலாற்றின் உண்மைகள் என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள்தான். எனவே இரண்டகராய் இருக்கும் நீங்கள் அம்மக்களுக்கும் அந்த தேசவிடுதலைக்கான போர்களத்திலும் களமாடிய எமக்கு அறிவுரை சொல்வதற்கு தகுதி உடையவர்தான் நீங்கள் என்பதை முதலில் உங்கள் மனச்சாட்சியிடமே விட்டுவிடுகின்றேன்.
காரணம், உயர்ந்த உன்னதமான விடுதலைப் பேரொளிகளின் தியாகத்தை எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்து வாழ்க்கை நடாத்திய அற்ப மனிதப் பதர் நீங்கள் என்பதை என் தாய்நிலமும் அந்நிலத்து மக்களும் நன்கறிவார்கள். அதனால்தான் என்னவோ தலைவர் பிரபாகரனுக்கு எதிரான உங்கள் எழுத்தைப் படித்த அறிவார்ந்த பேராளுமை ஒருவர் தனது பதிவில், ஒரு மனநோயாளிகளின் எழுத்து அது என்று குறிப்பிட்டிருந்தார். அக்கருத்தை நானும் வழிமொழிகின்றேன்.
முள்ளிவாய்க்கால் படுகொலை 2009. தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கை. இன்னும் நீதி கிடைக்காத மக்கள்.
"நீளிரா" திரைப்படம் தொடர்பான கடுமையான மறுப்பு
நீங்கள் "நீளிரா" திரைப்படத்தைப் பார்த்து எழுதியிருக்கும் பதிவு ஒரு சாதாரண விமர்சனம் அல்ல. அது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மீதும் நீண்டகாலமாகக் குவிக்கப்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கண்ணோட்டத்தின் தொடர்ச்சி.
நீங்கள் சொல்கிறீர்கள்: "விடுதலைப் புலிகளின் தலைமையின் தவறான புரிதல்களால்" IPKF உடன் மோதல் ஏற்பட்டது. "பிரபாகரனை எதிர்த்து பேசும் ஆற்றல் யாரிடமும் இல்லை." "இந்தியாவை நட்பு சக்தியாகப் பாதுகாத்திருந்தால் தமிழர்களின் வாழ்வு வேறு விதமாக இருந்திருக்கும்." "யுத்தத்தில் இல்லாதொழிக்கப்பட்ட" புலிகளின் செயல்களுக்கு இப்போது வரலாற்றுப் பெறுமதி இல்லை. இவை அனைத்தும், 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையின் (Indo-Sri Lanka Accord) அடிப்படைப் பலவீனங்களை வசதியாக மறைக்கின்றன.
அந்த உடன்படிக்கை: தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்தது. இலங்கை ஒருமைப்பாட்டை முன்னிலைப்படுத்தியது. புலிகளை பங்கேற்க வைக்காமல், அவர்களை நிராயுதபாணியாக்க முயன்றது. IPKF "அமைதி" என்ற பெயரில் வந்து, சில மாதங்களுக்குள் தமிழ் மக்கள் மீது யாழ்ப்பாணம் மருத்துவமனைப் படுகொலை (68 பேர் — மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள் உட்பட), பல பாலியல் வன்முறைகள், சிவில் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றைப் புரிந்தது. இவை வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகள்.
புலிகள் இந்தியாவை ஆரம்பத்தில் நம்பினர். RAW-இன் உதவியைப் பெற்றனர். ஆனால் இந்தியா தன் புவியியல் நலனுக்காக (இலங்கையை தன் செல்வாக்கில் வைத்திருக்க) தமிழர்களைப் பயன்படுத்தி, பின்னர் அவர்களை எதிர்க்கத் தயங்கவில்லை. இதை "தவறான தனிநபர் புரிதல்" என்று சுருக்கி, ஒரு தலைவரின் மீது மட்டும் பழி சுமத்துவது வரலாற்றை எளிமைப்படுத்தும் செயல்.
வரலாற்றைத் திரிக்காதீர்கள்
ஜதீந்திரா அவர்களே!, வன்மத்தை கக்குதல் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் சலிப்பூட்டும் அரசியல் என்ற உங்களின் இப்பதிவு. அதில் எந்த வித விமர்சனப் பகுப்பாய்வும் இல்லாமல் உளறி வைத்திருக்கின்றீர்கள். ஓட்டுக்குழு ஆதரவாளர், ஓட்டுக்குழு சார்பாக இரண்டு தடவை திருக்கோணமலை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 1812 வாக்குகள் பெற்று மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓர் அரசியல் உளவாளியின் இந்தப் பதிவு எமக்கொன்றும் வியப்புத்தரவில்லை என்று சொல்லி கடந்து போக முடியவில்லை.
ஏனென்றால் விமர்சனம் எனும் பெயரில் விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும், தமிழர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதைத் தவிர ஆரோக்கியமான கருத்தையோ விமர்சனத்தையோ அதில் நீங்கள் பதிவுசெய்யவில்லை. விடுதலைப்போராட்டம், இந்திய அரசின் நகர்வுகள், இந்திய இராணுவத்தின் காட்டிக்கொடுப்பு, அதன் கபளீகரங்கள், மாகாண சபைத் தேர்தல், தலைவர் மாகாண சபையினை நிராகரித்தமைக்கான காரணம், இந்திய அரசின் இயலாமை, வரதராசப்பெருமாளின் ஈழப்பிரகடனம், என அத்தனை விஷயங்களையும் அன்றுமுதல் இன்றுவரை அறிந்தவர் தமிழ்சமூகத்தினர் பலருண்டு எம் தேசத்தில்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள். தங்கள் இளமையையும், உயிரையும் தாய்நாட்டுக்காக அர்ப்பணித்தவர்கள். (புகைப்படம்: WSWS)
ஆனால் நீங்களோ, தோல்வியடைந்த வரலாறு பெறுமதியற்றது என வியாக்கியானம் செய்வது மிகவும் பிற்போக்கான அறிவு நிலை மற்றும் அளவுகடந்த வன்மமேயாகும். வெற்றியடைந்தது மட்டும் வரலாறு இல்லை, உலக வரலாறு என்பது வெற்றி தோல்வி எனும் கற்களால் கட்டப்பட்ட பெரும் கட்டிடம். ஒன்றை நீக்கினால் இன்னொன்று இல்லை. உலக நியதியும் இதுதான்.
பெயரளவில், எழுத்தாளன் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஒரு ஆய்வாளர் எனும் பெயருடன் நீங்கள் பிச்சைப்பாத்திரம் ஏந்திக்கொண்டு எழுதுவதை நாங்கள் விமர்சிக்கவில்லை, ஆனால் ஒரு ஊடக விபச்சாரி போல் (இதுவும் நீங்கள் ஈழநாட்டில் எழுதிய வரிகள்தான்) நடந்துகொள்வதுதான் வியப்பாக இருக்கின்றது. ஆனால் வரலாற்றை தெரிந்தும் அதை திட்டமிட்டே மடைமாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது. இவ்வாறு வரலாற்றை திரிபுவாதம் செய்தவர்களை வரலாறு மன்னித்ததாக வரலாற்றில் கூட இல்லை — அவர்கள் என்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு இறுதி அழைப்பு
எனவே மீண்டும் சொல்கின்றேன், போராட்டத்தில் தவறுகள் இருந்திருக்கலாம். எந்தப் போராட்டத்திலும் இருக்கும். ஆனால் அந்தப் போராட்டம் 1956 முதல் தொடர்ந்த இன அழிப்பு, மொழிக் கொள்கை, கல்விப் பாகுபாடு, குடியேற்றம், 1983 கறுப்பு ஜூலை ஆகியவற்றின் விளைவு. அதை மறைத்து, "தலைமையின் தவறு" என்று மட்டும் சொல்வது, அநீதியை நியாயப்படுத்தும் செயல்.
உங்கள் பதிவு என்னைப் போன்று, போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை மட்டுமல்ல — இன்னும் வலியுடன் வாழும் தமிழ் மக்கள் பலரையும் கொதிப்படையச் செய்கிறது. வரலாற்றைத் திரிக்காமல், முழு உண்மையுடன் எழுதுங்கள். அப்போதுதான் உங்கள் எழுத்துக்கு உண்மையான பெறுமதி இருக்கும்.
எமது போராட்டம் மௌனிக்கப்பட்டதே அன்றி முடிந்துபோகவில்லை. இலட்சியதாகம் நீறுபூத்த நெருப்பாய் பின்தொடர்ந்தே வருகின்றது. அது பேரண்டப் பெருநெருப்பாய் மீண்டு எழும். அக்கினிக்குஞ்சுகளை எம் மண்ணில் விதைத்தவர்கள் நாங்கள். எனவே வரலாறு பொய் சொல்லாது என்ற நம்பிக்கையுடன்..
0 Comments