78 ஆண்டுகள் சுதந்திரம்: தமிழர் உரிமையும் இலங்கையின் இறைமையும்
இலங்கையின் சுதந்திரம்: ஒரு கேள்விக்குறி
இலங்கை தீவு இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் அப்பம். நிலைமாறு கால நீதியின் கீழ் அரசாங்கம் ஒவ்வொரு ஜெனிவா கூட்டத்தொடரிலும் போய் நின்று பொறுப்பு கூற வேண்டியிருக்கு வெளியில வெள்ளைக்காரனுக்கு பொறுப்பு கூற வேண்டி இருக்கு. தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் பொறுப்பு கூறி இருந்திருந்தால் வெள்ளைக்காரனுக்கு பொறுப்பு கூற வேண்டி வந்திருக்காது.
ஒரு அனைத்துலக அரங்கில் புருத்தியாருக்கு பொறுப்பு கூற வேண்டிய இருக்கும் ஒரு நாடு சுதந்திரமான நாடா? சீனாவிடம் ஹம்பாந்தோட்டையையும் போர்ட் சிட்டியையும் கொடுத்துவிட்டு இனி சொல்லாமா நாங்கள் சுதந்திரமானது என்று? கிடையாது. இந்த நாட்டின் முப்படை தளபதி உட்பட பெரும்பாலான தளபதிகள் ஐரோப்பாவுக்கோ அமெரிக்க கண்டத்துக்கோ போக முடியாது. இந்த நாட்டில் யுத்தத்தை வென்றதாக கொண்டாடப்படுகின்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் அமெரிக்க கண்டத்துக்கு போக முடியாது. பிரித்தானியாவுக்கு போக முடியாது. அப்படி என்றால் அவர்கள் வென்றெடுத்த சுதந்திரத்தின் பொருள் என்ன?
தமிழர் போராட்டமும் இலங்கையின் இறைமையும்
இந்த தீவு ஒரு இறைமையுள்ள தீவு சுதந்திரமான தீவு என்று இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். போராடும்போது அதே நேரம் மூன்றாவது தரப்பொன்று தலையிட வேண்டிய தேவை வரும்பொழுது இலங்கை தீவின் சுதந்திரம் கேள்விக்குள்ளாகுது. எனவே தமிழ் மக்கள் போராடும் வரை இலங்கை தீவின் சுதந்திரமும் இறைமையும் சோதனைக்குள்ளாகும்.
இலங்கை தீவின் நாடாளுமன்றத்திற்கு உள்ளால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. கிடைக்கக்கூடிய தீர்வு வெளிப்படை தன்மையற்ற ஒரு தீர்வாகவே இருக்கும். அதை அவர்கள் ஐக்கிய ராட்சி என்பார்கள் வேறு ராட்சி என்பார்கள். அது வெளிப்படை தன்மை உடையதாக இருக்காது. சகஜீவிகளாகிய தமிழ் மக்களை முஸ்லிம்களை மலையகத்தை ஒரு தேசங்களாக ஏற்றுக்கொள்ள தவறினால் இலங்கை தீவின் இறைமையும் சுதந்திரமும் சோதனைக்குள்ளாவது தவிர்க்க இயலாது.
சிவாஜிலிங்கம் சொன்னார்: நாங்கள் அடிமைகள்
நாங்கள் மட்டும் அடிமைகள் அல்ல, சிங்களவர்களும் அடிமைகள்தான். 78 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் அடிமைகள்தான். இன்றைக்கு சுதந்திர சதுக்கத்தில் படை அணிவகுப்பின் முன் கொண்டாடப்படுவது சுதந்திர தினம் அல்ல. காலிமுக திடலில் பீரங்கி வேட்டுகளை தீர்ப்பது சுதந்திரம் அல்ல.
ஒரு நாட்டை ஐஎம்எஃப் பாராட்டுகிறது என்று சொன்னால் அந்த நாடு ஐஎம்எஃப்-ன் நிகழ்ச்சி நிரலுக்கு அடங்கிவிட்டது என்று அர்த்தம். பிறகு என்ன சுதந்திரம்? பொருளாதார அர்த்தத்தில் ஐஎம்எஃப்-ன் நிகழ்ச்சி நிரலுக்கும் உலக வங்கியின் நிகழ்ச்சி நிரலுக்கும் உடன்படும் நாடுகள் அவற்றினுடைய அடிமைகள் தான். அத்தகைய அர்த்தத்தில் கூறின் அது சுதந்திரமே அல்ல. இலங்கை ஒரு சுதந்திரமான நாடு கிடையாது, சுதந்திரமான தீவு கிடையாது.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டங்கள்
இப்பொழுது ஒரு புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அதாவது பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் முயற்சிக்கிறது. இத்தருணத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக விமர்சன பூர்வமான கட்டுரைகளை தொகுத்து 2009 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் சிஎச்ஆர்டி வெளியிட்ட ஒரு நூலின் அறிமுக உரையில் பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டுகிறார்.
உயாங்கொட கூறுகிறார்: "காலனித்துவத்துக்கு பின்னரான பெரும்பாலான காலகட்டங்களில் இந்த இலங்கை தீவு அசாதாரண சட்டங்களின் கீழ் தான் ஆளப்பட்டிருக்கிறது. 1971லிருந்து தொடங்கி இன்றுவரையிலும் சின்ன சின்ன இடவெளிகளோடு இலங்கை தீவு அவசரகால சட்டத்தின் கீழ் இருந்திருக்கிறது. பின்னர் கடந்த 46 ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருக்கிறது."
இதில் அசாதாரண சட்டங்களே சாதாரண சட்டங்கள் போல செயல்படுகிற ஒரு சட்டச் சூழலுக்குள் இந்த நாடு இருக்கிறது. இதற்கு பிறகு இந்த நாட்டை ஒரு சுதந்திரமான நாடு என்று எப்படி கூற முடியும்? இது சுதந்திரமான நாடு கிடையாது.
துப்பாக்கிகளற்ற பாதுகாப்பான இரவு
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான இரவு இல்லை என்றால் பௌத்த கோவில்களுக்கும் துப்பாக்கிகளற்ற பாதுகாப்பான இரவு இருக்காது. துப்பாக்கிகளற்ற பாதுகாப்பான இரவு வடக்கு கிழக்கில் எந்த ஒரு புத்த விகாரைக்கும் இல்லை. பாவம் புத்த பகவான். எந்த ஒரு புத்த தேவாலயத்தையும் ஒன்றில் படை வளாகத்துக்குள் கட்ட வேண்டும். அல்லது ஆரியகுளம் சந்தியில் இருப்பது போல அதுக்கு முன்னுக்கு படைத்தரப்பு துப்பாக்கோடு நிற்கணும்.
அகிம்சையை போதித்த புத்த பகவானின் ஆலயத்துக்கு ஆயுத பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று சொன்னால் இந்த நாட்டின் சுதந்திரத்தின் அளவை நாங்கள் மதிப்பிடலாம். இது ஒரு சுதந்திரமான நாடு என்றால் புத்தருடைய ஆலயத்துக்கு துப்பாக்கிகளற்ற பாதுகாப்பான இரவு கிடையாது. இப்பொழுது தையிட்டியில் அவ்வாறு கட்டப்பட்ட ஒரு விகாரைக்கு எதிராக நாங்கள் மாதாமாதம் போராடுகிறோம். என்றால் இதற்கு பேர் சுதந்திரமா? இல்லை. சிங்கள மக்களும் சுதந்திரமாக இல்லை.
தமிழ் நோக்கு நிலையில்: மூன்று சந்தர்ப்பங்கள்
கடந்த 78 ஆண்டுகளுக்குள் இலங்கையின் சுதந்திரம், இறைமை என்பன தமிழ் நோக்கு நிலையில் இருந்து சோதனைக்குள்ளாகிய மூன்று சந்தர்ப்பங்களை நான் தொகுத்து தாரேன்:
முதலாவது: இந்திய இலங்கை உடன்படிக்கை
இந்தியா தன் விமானப்படையை அனுப்பி முதலில் சாப்பாடு போட்டது. பின்னர் படையை அனுப்பி ஒரு உடன்படிக்கை செய்தது. இந்திய இலங்கை உடன்படிக்கையும் அதன் கீழ் இந்திய அமைதி காக்கும் படையினரின் பிரசன்னமும் என்ற விஷயம் இலங்கை ஒரு சுதந்திரமான தீவு அல்ல என்பதனை தமிழ் நோக்கு நிலையிலிருந்து உணர்த்திய ஒரு முதலாவது சந்தர்ப்பம்.
இரண்டாவது: ரணில் பிரபாகரன் உடன்படிக்கை
மேற்குலக இணை அனுசரை நாடுகளின் நிர்பந்தத்தின் கீழ் ஸ்கண்டினேவிய யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு நாட்டில் இறங்கியது. ஒரு புரத்தி படைக்கட்டமைப்பு இலங்கைக்குள் வந்து நின்றது. இங்கேயே, இலங்கையின் சுதந்திரம் கேள்விக்குள்ளாகுது. இறைமை கேள்விக்குள்ளாகுது. ரணில் பிரபாகரன் உடன்படிக்கை என்பது இலங்கை தீவில் இரண்டு பவர் சோர்ஸ் அதிகார மையங்கள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்ட ஒரு உடன்படிக்கை.
மூன்றாவது: நிலைமாறு கால நீதி
30/1 ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் நிலைமாறு கால நீதிக்கு இலங்கை கடப்பாடுடையதாக தன்னை ஏற்றுக்கொண்டது. அதற்கு இணை அனுசரணை வழங்கியது. இலங்கை ஐநாவுக்குள் இருக்கிறது என்றபடியால் இலங்கை ஐநாவில் பொறுப்பு கூற வேண்டி இருக்கிறது.
பேரரசுகளின் விளையாட்டு திடல்
பேரரசுகளின் விளையாட்டு திடலில் விளையாட வேண்டிய மக்கள் நாங்கள். ஒரு அரசை போல சிந்திக்க வேண்டும். ஒரு அரசை போல முடிவெடுக்க வேண்டும். ஒரு அரசை போல நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால் மட்டும்தான் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காணலாம்.
இந்த சிறிய தீவு இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் அப்பம். ஹம்பாந்தோட்டையில் சீனா 99 ஆண்டு கால குத்தகைக்கு துறைமுகத்தை வாங்கி வைத்திருக்கிறது. கொழும்பு துறைமுகத்துக்கு சற்று அருகே சீனா ஒரு போர்ட் சிட்டியை கட்டிக் கொண்டிருக்கிறது. இதுக்கு என்ன சுதந்திரம்? இதுக்கு பேரா சுதந்திரம்? இல்லை.
தேசியவாத அரசியல்: திரட்டுதல்
தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்களை தேசமாக திரட்டுவது. மக்களைத் தேசமாக திரட்டினால் அவர்கள் ஒரு பேரபலமாக மாறுவார்கள். அவர்கள் தவிர்க்க முடியாத பலமாக மாறுவார்கள். அப்படி வரும்போது இந்த மக்களைத் திரட்டினால் நாங்கள் அனைத்துலக சமூகத்தைத் திரட்டலாம். அனைத்துலக சமூகத்தைத் திரட்டினால்தான் ஒரு தீர்வை நோக்கிப் போகலாம்.
இனப்பிரச்சினைகள் எதுவுமே உள்நாட்டு பிரச்சினைகள் அல்ல. எல்லா இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலக பிரச்சினைகள்தான். நாங்கள் தென்பு திலியிலிருந்து தொடங்கி ஓஸ்லோ, டோக்கியோ வரையும் போய் வந்த மக்கள். இன்றைக்கு ஐநாவில் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
தலைமுறை இடைவெளி மற்றும் தொழில்நுட்பம்
நாங்கள் கைபேசி செயலிகளின் கைதிகளாக இருக்கும் ஒரு தலைமுறையோடு புதிய வழியில் புதிய பாணியில் உரையாட வேண்டிய தேவை உண்டு. 40 அல்லது 45 வயசுக்கு மேற்பட்ட ஆட்களுக்கும் எங்களுக்கும் இடையில் தான் பொதுவான விஷயங்கள் இருக்கு. 30 வயசுக்கு கீழ்பட்ட ஆட்களுக்கும் எங்களுக்கும் இடையில் பொதுவான விஷயங்கள் இல்லை.
அவர்களிடம் இன உணர்வு உண்டு. அது எப்படி வெளிப்படுவது என்று தெரியாமலும் அது ஒரு அரசியல் ஆக்க சக்தியாகவும் மாற்றப்படாமல் இருக்கு. இந்த தொழில்நுட்பத்தின் கைதியாக இருக்கும் ஒரு தலைமுறையை நாங்கள் கையாள தவறுகிறோம். ஒரு தேசத்தை திரட்டும் விடயத்தில் இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் எந்த அளவுக்கு கையாண்டிருக்கிறோம்? இல்ல தேசத்தை சிதைக்கும் விஷயத்தில் தான் தொழில்நுட்பத்தைக் கூட கையாண்டிருக்கிறோம்.
முடிவுரை: கற்றுக்கொண்ட பாடங்கள்
கடந்த 78 ஆண்டுகளில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் பார்த்தால்: இந்திய இலங்கை உடன்படிக்கை, பிரபாகரன் ரணில் உடன்படிக்கை, நிலைமாறு கால நீதி — இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்த ரெண்டும் இல்லை என்றால் தீர்வு வராது.
நாடாளுமன்றத்தில் வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. தீர்மானம் எடுக்கும் அந்த ப்ராசெஸில் பங்கெடுக்க வேண்டும். நாங்கள் தீர்மானம் எடுப்பதில் பங்கேற்பதுதான் ஜனநாயகம். இலங்கை தீவின் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் தீர்மானம் எடுப்பதில் பங்கேற்க முடியாது.
எனவே பேரரசுகளின் விளையாட்டு திடலில் விளையாட வேண்டிய மக்கள் நாங்கள். ஒரு அரசை போல சிந்திக்க வேண்டும். ஒரு அரசை போல முடிவெடுக்க வேண்டும். ஒரு அரசை போல நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால் மட்டும்தான் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை காணலாம்.
0 Comments